இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 06.10.2024 வரை 39,965 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, ஹம்பகா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகின்றது.
எனவே மக்கள் தமது சுற்றுச்சூழலில் நீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளதற்கும் அறிவுறுத்தப்படுகின்றனர்.