150வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தேசிய முத்திரைக் கண்காட்சி


150வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, நாளை (08) முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரை தேசிய முத்திரைக் கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சி நடைபெறும் நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை தபால் தலைமையகத்தில் நடைபெற தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

அதன்படி, உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட முத்திரைக் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட உள்ளன.
Previous Post Next Post