கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வளாகத்தை தம்புள்ளையில் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி



தம்புள்ளைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு அங்கு கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வளாகத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி தம்புள்ளை நகரில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் கட்டடத் தொகுதி, நிருவாகத் தொகுதி போன்றவற்றை குத்தகை அடிப்படையில் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வளாகமாக தம்புள்ளை நகரில் புதிய கட்டடங்களை அமைக்காது, தேவையான கட்டடத் தொகுதியை நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதனால் விசேடமாக கொழும்பில் இருந்து தூர இடங்களான அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற பிரதேசங்களில் பல்கலைக்கழகம் மற்றும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனங்கள் போன்ற்வற்றை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன விபரித்தார்.
Previous Post Next Post