அதிரடியான ஆடுகளத்தில் இலங்கை: தடுமாற்றத்தில் இந்திய அணி



புதிய இணைப்பு

இந்திய அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் தொடரில் இலங்கை அணி அதிரடியான ஆரம்பத்தை மேற்கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.

நாணய சுழட்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பத்தும் நிசங்க, அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.

முதலாம் இணைப்பு

இந்திய (india) மற்றும் இலங்கை (srilanka) இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்ததாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை அணி 

இலங்கை - இந்திய அணிகள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதாலும், இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் இலங்கை அணி தொடரை வெற்றிக்கொள்ளும். 

இந்திய அணி வெற்றி பெற்றால் போட்டி சமநிலையில் முடியும்.

இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், அது இலங்கைக்கு கிடைத்த மூன்றாவது ஒருநாள் தொடராக வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதோடு, மேலும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளின் பின்னர் வெற்றிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post