இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்



இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர்(Gautam Gambhir) நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 ரி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட்(Rahul Dravid) ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா  அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும், "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.நவீனகால கிரிக்கெட்டிற்கு இவரை போன்ற ஒருவர் தேவை" என்று ஜெய் ஷா பதிவிட்டுள்ளார்.

தலைமை பயிற்சியாளர்
அடுத்து 2025 சாம்பியன்ஸ் கிண்ணம், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய முக்கிய தொடர்கள் இருக்கும் நிலையில் கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

2007 ரி 20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2012 மற்றும் 2014 ஐபிஎல் கோப்பை வெற்றி என கவுதம் கம்பீர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்த ஒருவராவார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர், ராகுல் டிராவிட்டை விட அதிக சம்பளத்தை பெறுவார்.என்றும் ஆண்டுக்கு ரூ. 12 கோடி சம்பளம் பெறுவார் என்று தகவல் வெளியாகி உள்மை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post