கனடாவின் முக்கிய நகரம் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை



கனடாவின் (Canada) பிரதமான நகரமன டொரன்டோவில் (Toronto) வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் டொரன்டோவின் வெப்பநிலை 29 பாகை செல்சியஸ் அளவில் காணப்படும் என்றும் காற்றின் ஈரப்பதன் அடிப்படையில் இந்த வெப்பநிலையானது சுமார் 37 பாகை செல்சியஸ் வரையில் அதிகரிக்கக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை

இதேவேளை, ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் நிலவும் வெப்பநிலை, அநேகமான பகுதிகளில் தொடர்ந்தும் நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 29 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post