பண்டிகைக் காலத்திற்காக முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி



உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையினை நிலையாகப் பேணுவதற்காக ஏப்ரல் 30 வரை அவசியமான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க தற்போது 18 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், பண்டிகைக் காலத்தின் தேவைக்காக மேலும் 42 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இம்முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட இந்திய நிறுவனத்தினால் விலை மனுக் கோரி உள்ளதுடன் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு இணங்க பெறுகை மேற்கொள்வதற்கான நிதிப் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்ளை அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
Previous Post Next Post