பாடசாலைப் பாடநூல் அல்லது சீருடை கிடைக்காத பாடசாலைகள் இருப்பின் உடனடியாக அறிவிக்கவும் - கல்வி அமைச்சின் அறிவித்தல்



அரசாங்கத்தின் சகல பாடசாலை மாணவர்களுக்கும் 2024ஆம் வருடத்திற்கான பாடநூல் மற்றும் சீருடை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதற்கிணங்க சகல பாடசாலைகளுக்கும் பாடநூல்கள் மற்றும் சீருடைகள் நாடு பூராகவும் உள்ள சகல வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இதுவரை பாடசாலைப் பாடநூல்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை ஏதேனும் காணப்படுமாயின் அது தொடர்பாக பின்வரும் தொலைபேசிஃ பெக்ஸ்ஃ மின்னஞ்சல் ஊடாக உடனடியாக கல்வி அமைச்சிற்கு அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

பாடநூல்களுக்காக தொலைபேசி இல. - 0112784815ஃ0112785306
பெக்ஸ் - 0112784815
மின்னஞ்சல் -epddistribution2024@gmail.com
சீருடைகளுக்காக தொலைபேசி இல. - 0112785573
பெக்ஸ் - 0112785573
மின்னஞ்சல் - schoolsupplymoe@gmail.com
Previous Post Next Post