திடீரென செயலிழந்த பேஸ்புக் செயலி - மெட்டாவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்



பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் செயலிழந்தமையினால் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் பேஸ்புக் இன்ஸ்டாக்ராம் மற்றும் மெசெஞ்சர் ஆகிய செயலிகள் நேற்றைய தினம் திடீரென செயலிழந்ததால் அதன் பயனாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

எனினும் 2 மணி நேரத்தின் பின் அவை மீண்டும் வழமைக்குத் திரும்பின.

தொழில்நுட்பக் கோளாறு 
சமூகவலைதளங்கள் செயலிழந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் என 'மெட்டா' நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.

பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ‘மெட்டா’ நிறுவனத்தின் வருமானம் 1.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post