சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது



இலங்கை சதொச நிறுவனம் நேற்று (08) முதல் சில அத்தியாவசிய பொருட்கள் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, பால் மா, செத்தல் மிளகாய், பச்சரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

1060 ரூபாவாக இருந்த லங்கா சதொச பால் மாவின் விலை 125 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 935 ரூபாவாகும்.

ஒரு கிலோ செத்தல் மிளகாய் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,175 ரூபாவாகும். 

ஒரு கிலோ கிராம் பச்சரிசி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 3 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 270 ரூபாவாகும்.
Previous Post Next Post