இந்தோனேசியாவில் இடம்பெற்ற கால்பந்து போட்டியின்போது ஆடுகளத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் களத்தின் நடுவிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தோனேசியாவின் FLO FC கழகம் மற்றும் FBI கழகம் ஆகிய அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி (11.02.2024) நடைபெற்றது.
இந்த போட்டியின் நடுவே கால்பந்து வீரர் ஒருவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் மைதானத்தில் விழுந்துள்ளார்.
இந்நிலையில், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கால்பந்து வீரரை மின்னல் தாக்கும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிரேசிலின் கால்பந்து மைதானத்தில் நடந்த ஒரு போட்டியின் போது மின்னல் தாக்கியதில் 21 வயது வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் காயமடைந்தனர்.
அத்தோடு, 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் - ஜார்க்கண்டின் மாவட்டத்தில் கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் 19 வயது இளைஞன் மின்னல் தாக்கி உயிரிழந்திருந்தார்.