2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்ச்சை நடைபெறும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை 2024 மே-ஜூன் மாதங்களிலும், உயர்தரப் பரீட்சை 2024 டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும் பரீட்சை நடைபெறும் திகதிகள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை அடுத்த ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.