இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024 பெப்ரவரி 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2024 பெப்ரவரி 26ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
மத்திய மலை நாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வட மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (30-40) கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீச கூடும்
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.