இலங்கை - ஆப்கான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகளின் கடைசிப் போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி, 20 ஓவர் முடிவில் 209 ஓட்டங்கள் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
போட்டியில், பதும் நிஸ்ஸங்க சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிலையில், காயம் காரணமாக 60 ஓட்டங்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
எனினும், ஆப்கான் அணி வீசிய கடைசி ஓவரின் கடைசிப் பந்து நோ போல் என்ற போதும் நடுவர்கள் அதனைக் கவனிக்காத காரணத்தினாலேயே இலங்கை அணி தோற்க நேர்ந்துள்ளதாக இலங்கை ரசிகர்களால் ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.