லாஃப் எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

 


லாஃப் எரிவாயு விலை உயர்த்தப்படாது என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,985 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 1,595 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.



இதேவேளை, மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post