கண்டி - மஹியங்கனை வீதியின் தெல்தெனிய, ரம்புக்வெல்ல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து பழக்கடை ஒன்றின் மீது விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (04.11.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பழக்கடை உரிமையாளர் உயிரிழப்பு
உயிரிழந்த பெண் அதே பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் எனவும், அவர் அந்த பழக்கடையின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்மேடு சரிந்து விழுந்ததையடுத்து, மண்ணுக்குள் புதைந்து கிடந்த குறித்த பெண்ணை பொலிஸார் பிரதேச மக்களின் உதவியோடு மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து உடனடியாக அவரை தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.