உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஓர் விருதை வென்று சாதனை படைத்தார் மெஸ்ஸி

 


கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.


கடந்த ஆண்டு ஆர்ஜென்டினா அணியை வழிநடத்தி உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல செய்திருந்தார் லயோனல் மெஸ்ஸி.


குறித்த தொடரில் தங்கப் பந்து விருதையும் அவர் வென்றிருந்தார். சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் பலோன் டி 'ஓர் விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டிருத்தது.


விருதுக்கான பரிந்துரை


இதனடிப்படையில்,30 வீரர்கள் இந்த விருதுக்கான பரிந்துரையில் இடம் பெற்றிருந்தனர்.


ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் பிரான்ஸ் நாளிதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.


விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுகிறார். நடப்பு ஆண்டில் கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர்.


இதில் முதலிடம் பிடித்த மெஸ்ஸி, நடப்பு ஆண்டுக்கான பலோன் டி 'ஓர் விருதை வென்றார்.


மகளிர் பிரிவில் பலோன் டி 'ஓர் விருது


இதன் மூலம் 8-வது முறையாக அவர் இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021இல் பலோன் டி 'ஓர் விருதை வென்றுள்ளார்.


தற்போது இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும், மகளிர் பிரிவில் பலோன் டி 'ஓர் விருதை ஸ்பெயின் நாட்டு வீராங்கனை அடனா பொன்மதி வென்றுள்ளார்.


மேலும், ஆடவர் பிரிவில் சிறந்த கழக அணிக்கான விருதை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது.

Previous Post Next Post