நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்: 128 பேர் மரணம்

 

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


அதிகளவானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  


சக்திவாய்ந்த நிலநடுக்கம்


நேபாளத்தில் ஜஜர்கோட்டின் மேற்குப் பகுதியில் நேற்று இரவு 11.47 மணியளவில் 6.4 ரிக்டர்  அளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


இதன்போது, அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.


 மேலும், இந்த நிலநடுக்கம் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது.

Previous Post Next Post