துருக்கியில் ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு

 

துருக்கியின் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கடந்த ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்தில் 08 இலங்கையர்கள் சிறிதளவு காயமடைந்துள்ளனர்.


வாகன விபத்து


இஸ்தான்புல்லில் விமான நிலையத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று 50 அடி குன்றின் கீழே விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


அத்துடன் விபத்து ஏற்பட்ட குறித்த பேருந்தில் சுமார் 35 இலங்கையர்கள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post