உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு மூலம் ஏற்படும் குழப்பம்: கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம்

 


உயர்தரப் பரீட்சை(2023) ஒத்திவைக்கப்படுவதனால் சாதாரணதரப் பரீட்சைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தின் நிறைவு பாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்ட அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்


மேலும், உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தேர்வுகளை மீண்டும் எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு இது நியாயமற்றது எனவும் மீண்டும் மீண்டும் வரும் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் நேரம் போதுமானதாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post