சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

 


இலங்கையில், மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


150 எரிபொருள் நிலையங்கள்


தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால் சினோபெக் நிறுவனத்துக்காக 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


தற்போது, மேலும் 50 நிலையங்களை அமைப்பதற்காக சினோபெக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post