அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக குறைப்பு

 


லங்கா சதொச நிறுவனம் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி, ஒரு கிலோ கிராம் சோயாமீட்டின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, 580 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.


ஒரு கிலோ கிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு, 40 ரூபாவால் குறைக்கப்பட்டு, 290 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.


ஒரு கிலோ கிராம் நெந்தலி மீனின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

Previous Post Next Post