சினோபெக் திட்டத்தின் முதல் தொகுதியான 45,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த எரிபொருள் பங்குகள் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதோடு அந்நிய செலாவணி பொருளாதார சவாலை எளிதாக்கும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது சினோபெக் எரிபொருள் சரக்கு இன்று (02.08.2023) நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்
எரிபொருள் நிலைய விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்ட பின், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிலையங்களுடன் சில்லறை பெட்ரோலிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
