இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவினால் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவிற்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டதுடன் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற சரித்திர சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.
புதிய காணொளி
தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் ஆய்வை தொடங்கியுள்ளது.
அண்மையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறும் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி நிலவில் சற்று தூரமாக வலம் வரும் வீடியோவை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
அடுத்தடுத்து இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசக்தி
இதேவேளை நிலவில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரையிரங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' எனப் நேற்று(26.08.2023) பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவதற்காக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது, சந்திரயான் - 3 திட்ட பணிப்பாளரான தமிழகத்தின் விஞ்ஞானி வீரமுத்துவேலை சந்தித்து கலந்துரையாடியதுடன் சந்திரயான் 3 மாதிரியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நினைவு பரிசாக பெற்றுக்கொண்டுள்ளார்.

