கடும் வெப்பம் - விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தினசரி ஆவியாகும் 30 லட்சம் லீற்றர் தண்ணீர்

 


நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தினசரி மூன்று மில்லியன் லீற்றர் நீர்  ஆவியாகி விடுவதாக அதன் பிரதம பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய தெரிவித்துள்ளார். 


 விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நிரம்பிய நீரின் அளவிலிருந்து மேற்பரப்பில் உள்ள சுமார் இரண்டு மில்லிமீட்டர் நீர் ஆவியாகிய நிலையில் தற்போது அது இரண்டு மடங்கு அதிகமாக ஆவியாகுவதாக அவர் கூறியுள்ளார். 


 ஜெர்மனி, பிரான்ஸ், கொரியா, சீனா போன்ற நாடுகள் ஆவியாகும் நீரின் அளவைக் குறைக்க தண்ணீரில் மிதக்கும் சோலார் பேனல்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் அவர்களால் கூடுதல் மின்சாரம் தயாரிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


 விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தற்போது 11 சதுர கிலோமீற்றர் நீர் மட்டுமே மீதம் உள்ளதாகவும், 13 சதுர கிலோமீற்றர் நீர் வற்றிவிட்டதாகவும் தலைமைப் பொறியாளர் தெரிவித்தார். 


 விக்டோரியா நீர்த்தேக்கம் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post