க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் (ஜூலை) 28ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (19.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளது.  

மேலும், 2022ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் எனவும்  விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.


பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 

மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 28 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறித்த திகதிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous Post Next Post