இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோர விபத்து! சாரதி தொடர்பில் வெளியான தகவல்

 பொலன்னறுவை-மனம்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிவேகமாக பேருந்து பயணித்ததில் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து பேருந்து  ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மேலதிக விசாரணை

முன்னர் ஆபத்தான வாகனம் செலுத்தியமைக்காக, குறித்த பேருந்து சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விபத்து இடம்பெறும் போது சாரதி மதுபோதையில் இருக்கவில்லை எனவும், அவர் வேறு ஏதேனும் போதைப்பொருளை பயன்படுத்தினாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Previous Post Next Post