இன்றும் (11.07.2023) ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய நிலவரம்
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 150,800 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,000 ரூபாவாக காணப்பட்டது.
ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக 148,000 ரூபா தொடக்கம் 149,000 ரூபா என்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது.
டொலரின் மதிப்பு அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு போன்ற விடயங்களே இலங்கையில் தங்கத்தின் பெறுமதி உயர்வுக்கு காரணம் என தங்க நகை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
