புத்தாண்டு காலப்பகுதியில் தலைநகர் கொழும்பில் விதிக்கப்பட்டுள்ள தடை!

 சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் சில பேருந்து நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் நுழைவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தடை விதித்துள்ளது.

பண்டிகையின் போது கொழும்பு – கோட்டை, பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர மத்திய பேருந்து நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.


பொலிஸாரின் உதவி 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,பேருந்துகளில், நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபட தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குணசிங்கபுர - பெஸ்டியன் மாவத்தை பேருந்து தரிப்பிடங்களுக்குள் யாசகர்கள் செல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது.

குறிப்பாக பேருந்துகளில் நடமாடும் வர்த்தகத்தை முன்னெடுக்க இடமளிக்க வேண்டாம் என பேருந்து பணிக்குழாமினருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.”என தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post