இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு மாகாணம்,கிழக்கு மாகாணம்,வடமத்திய மாகாணம்,மொனராகலை,மற்றும் குருநாகல் மாவட்டம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை எச்சரிக்கை
குறித்த மாவட்டங்களில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்ப்பதுடன் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
