இந்தியாவின் முடிவால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா..உலக குத்துச்சண்டையில் அரசியல்..கலக்கும் இந்தியர்கள்

 டெல்லி : மகளிருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அமெரிக்கா, உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துவிட்டது. இதற்கு காரணம், ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளை அவர்கள் நாட்டின் பெயரை பயன்படுத்தி போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டதே இதற்கு காரணம் ஆகும். எனினும் இந்த தொடரில் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 4 வீராங்கனைகள் அரையிறுதி வரை வந்த நிலையில், தற்போது 4 வீராங்கனைகளுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Border Gavaskar Trophy-யிலிருந்து Bumrah Ruled Out ஆனார்
நித்து கங்காஸ் மகளிருக்கான 45 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள நித்து கங்காஸ் அதிரடியாக விளையாடி வருகிறார். நித்து களமிறங்கிய 3 ஆட்டத்திலும் நடுவர்களே ஆட்டத்தை நிறுத்திவிட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அரையிறுதியில் ஆசிய சாம்பியனும், உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற கஜகாஸ்தான் வீராங்கனை அலுவாவை வீழ்த்தி நித்து இறுதிப் போட்டி வரை வென்று இருக்கிறார். பைனலில் நித்து மங்கோலியாவின் லுத்சாய்கானை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
சாவீட்டி போரா மகளிருக்கான லைட் ஹெவிவெயிட் பிரிவில் இந்தியாவின் சாவீட்டி போரா நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்று அங்கு உலக குத்துச் சண்டை போட்டியில் முன்னாள் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை விக்டோரியாவை 5க்கு0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையீறுதியில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மாவை வீழ்த்தி, தற்போது இறுதிப் போட்டியில் சீனாவின் வாங் லீனாவை எதிர்கொண்டார். இந்தப் போட்டி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
நிக்காத் ஷாரின் மகளிருக்கான லைட் பிளை பிரிவில் இந்தியாவின் நிக்காத் ஷாரின் அசத்தி வருகிறார். காலிறுதியில் தாய்லாந்து வீராங்கனை ரக்சத்தை விழ்த்திய அவர், அரையிறுதியில் டோக்யோ ஒலிம்பிக்கில் மேரி கோமை வீழ்த்திய வெலன்சியாவை 5க்கு0 என்ற கணக்கில் வீழ்த்தினார். தற்போது அவர் இறுதிப் போட்டியில் 2 முறை ஆசிய சாம்பியனான தீ தாமை எதிர்கொள்ள உள்ளார். இந்தப் போட்டி ஞாயிற்றுகிழமை 7 மணிக்கு நடைபெறுகிறது.

லவ்லினா மகளிருக்கான மிடில் வெயிட் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர விராங்கனை லவ்லினா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத் வென்ற இவர் அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் லி குயானை வீழ்த்தி உள்ளார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை பார்க்கரை அவர் எதிர்கொள்ள உள்ளார்.

Previous Post Next Post