மும்பை : ஐசிசி உலக கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு தற்போது ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நடப்பாண்டில் மட்டும் இரண்டு வாய்ப்பு இருக்கிறது. ஒன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வரும் ஜூன் மாதம் எதிர்கொள்கின்றது. மற்றொன்று இந்தியாவில் சொந்த மண்ணில் 50 ஓவர் உலக கோப்பை அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.
நேரம் வந்துவிட்டது இந்த நிலையில் இந்தியா உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கும் கருத்தை தற்போது பார்க்கலாம். இந்தியாவிற்கு தற்போது உலகக் கோப்பையை வெல்ல நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இறுதி போட்டி அரை இறுதிப்போட்டி என தொடர்ந்து தகுதி பெறுகிறார்கள்.
சச்சினை பாருங்கள் நீங்கள் சச்சின் டெண்டுல்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஆறு முறை உலக கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறார். ஆறு உலகக் கோப்பைத் தொடர் என்றால் 24 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார். ஆனால் அவர் கடைசி உலக கோப்பையை தான் வென்றிருக்கிறார். இதேபோன்றுதான் கால்பந்து போட்டியில் மெஸ்ஸியும் அவர்களெல்லாம் எவ்வளவு ஆண்டுகள் உலகக்கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறார்கள் .
மெஸ்ஸியை பாருங்க மெஸ்ஸி கோபா அமெரிக்காவை வென்றவுடன் உலக கோப்பையும் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் தான் சொல்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் நிச்சயமாக மழை பெய்யும் என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்றாரா, இல்லை என்று சொல்றாரா? ஏன் கமல் பாணியில் பேசுகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.என்ன அர்த்தம் ஆனால் உண்மையில் அவர் பேசியதற்கான அர்த்தம், இந்தியா கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் வென்றது. அதன் பிறகு 2015 உலக கோப்பையில் அரையிறுதிக்கும் 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கும் 2022 டி20 உலக உலகக்கோப்பை அரை இறுதிக்கும் இந்தியா சென்ற நிலையில் தற்போது இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றும் என ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.