”டிக்டாக் செயலி மூலம் உங்களை வேவு பார்க்கிறார்கள்” அவுஸ்திரேலியாவின் முன்னாள் துணை மந்திரி எச்சரிக்கை!

 டிக்டாக் மிகவும் மோசமான ஒரு செயலி, அதன் மூலம் உங்களை வேவு பார்க்கிறார்கள் என அவுஸ்திரேலிய முன்னாள் துணை மந்திரி அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளார்.

சீனாவின் செயலி

அவுஸ்திரேலியாவின் முன்னாள் துணை மந்திரி பார்னபி ஜோய்ஸ் (Barnaby Joyce) சீனாவின் டிக்டாக் நிறுவனம் மிகவும் ஆபத்தானது என அவுஸ்திரேலிய மக்களை எச்சரித்துள்ளார்.

“என்னிடம் டிக்டாக்(Tik Tok) இல்லை, இது சீனாவின் செயலி என்பதால் நான் அதைப் பயன்படுத்துவதில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் அதைப் பயன்படுத்தும் போது உங்களது தரவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்” என்று பார்னபி பார்னபி ஜோய்ஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

பார்னபி ஜோய்ஸ் (Barnaby Joyce)@NCA NewsWire / Gary Ramage

“ உங்கள் போனில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கூட உங்களைத் தெரிந்து கொள்கிறார்கள், அவ்வாறு செய்ய முடிந்தால், நீங்கள் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியும்.

"உங்கள் சொந்த கமெரா மூலம் உங்களை உண்மையில் பார்க்கும் திறன் அவர்களுக்கு இருக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது. அனைவரையும் அவர்கள் கண்காணிப்பதில்லை, ஆனால் அவர்களுக்கு தேவையான நபர்களிடமிருந்து நம்பமுடியாத அளவு தகவல்களைத் திரட்டுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

டிக்டாக் தடை

சமூக ஊடக தளங்களைப் பற்றிய உள்துறை அமைச்சகத்தின் விசாரணை வரும் வாரங்களில் அமைச்சர் கிளேர் ஓ'நீலிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

”டிக்டாக் செயலி மூலம் உங்களை வேவு பார்க்கிறார்கள்” அவுஸ்திரேலியாவின் முன்னாள் துணை மந்திரி எச்சரிக்கை! | Tiktok More Dangerous Said Australian Minister@getty images

தினசரி அவுஸ்திரேலியர்களுக்கான எந்தவொரு சமூக ஊடக பயன்பாடுகளின் பரந்த தடையை மறு ஆய்வு கருத்தில் கொள்ளாது என்பதும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனங்களில் பயன்பாடு அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்துப் பல மாதங்களாக விவாதம் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

சீன அரசாங்கத்துடனான அதன் உரிமையாளர் பைட் டான்ஸின் உறவுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் அரசாங்கத் துறைகள் Tik Tok ஐ தடை செய்துள்ளன.

Previous Post Next Post