நிலையான வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இலங்கையில் உள்ள பல்பொருள் இலங்கையில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு சுற்றுச்சூழல் முத்திரையை (Ecolabel) அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையில் நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்த உயர்மட்ட நிர்வாக மாநாடு சமீபத்தில் (11) கொழும்பில் உள்ள NH Collection ஹோட்டலில் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டில், தேசிய தூய்மையான உற்பத்தி மையம் (NCPC), இலங்கையின் தேசிய சுற்றுச்சூழல் லேபிளிங் திட்டமான Ecolable Sri Lanka திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டம் இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபையால் (Sri Lanka Accreditation Board - SLAB) அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் லேபிளிங் வலையமைப்பில் (GEN) முழு உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. Ecolable Sri Lanka திட்டம் ஜப்பானின் Eco Mark நிறுவனம் மற்றும் ஜப்பானிய சுற்றாடல் அமைச்சின் தொழில்நுட்ப ஆதரவுடன் இலங்கையில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு அதன் விரிவாக்கத்தைத் ஆரம்பித்துள்ளது