போர்த்துக்கல் நாடாளுமன்றம் (12) வியாழக்கிழமை, குழந்தைகள்
மற்றும் இளைஞர்கள் ஆன்லைன் தளங்கள் மற்றும் சமூக வலைப்பின்னல்களை
அணுகுவதை கட்டுப்படுத்தும் புதிய சட்ட வரைபிற்கு ஒப்புதல் அளித்தது.
அதன்படி இனி வெளிப்படையான மற்றும் சரிபார்க்கப்பட்ட பெற்றோர் ஒப்புதல்
இருந்தால் மட்டுமே அணுக முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது,
இளைஞர்களின் மன ஆரோக்கியம் மற்றும் ஒன்லைன் பாதுகாப்பில் சமூக
ஊடகங்களின் தாக்கம் குறித்த வளர்ந்து வரும் சிக்கல்களுக்கு மத்தியில்,
பல ஐரோப்பிய நாடுகளில் பரிசீலனையில் உள்ள இதே போன்ற நடவடிக்கைகளை
இந்த புதிய சட்ட வரைபு பின்பற்றுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.