வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்திற்காக இவ்வாண்டு முதற்கட்டமாக 500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, அதிமேதகு சனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் நேற்று (16.01.2026)காலை 09.30 மணிக்கு மீசாலை கிழக்கில் வீடமைப்புத் திட்டத்திற்காகதெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவருக்கான வீட்டுக்கான அடிக்கல் சம்பிரதாய பூர்வமாக நாட்டப்பட்டது.