துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்துக்கொண்டிருந்த இந்திய போர் விமானம் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே வீழ்ந்து , வெடித்து சிதறி தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் குறித்த தேஜஸ் போர் விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதாகவும், குறித்த விபத்துக்கு அதுவே காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
குறித்த விமானத்தின், விமானி குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பொது மக்கள் இல்லாத இடத்தில் குறித்த விமானம் விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.