இலங்கை மின்சார சபையால் தயாரிக்கப்பட்டுள்ள 2025-2034 ஆண்டுக்கான மின்கடத்தித் திட்டத்தில் மின்கடத்தல் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சில அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அவற்றை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்தவுள்ளது.
நுரைச்சோலை - வாரியபொல மின்கடத்தல் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நாட்டின் வட மேல்மாகாணத்திலுள்ள மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்துவதற்காக அமுல்படுத்தப்படவுள்ள முன்னுரிமைக் கருத்திட்டமாக அடையாளங் காணப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தில் 750 மெகாவாற்றுக்கும் அதிகமான மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல்வளம் காணப்படுகின்றமை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தில் நிலவுகின்ற மாற்றமடையும் இயல்பு கொண்ட மீள்புதுப்பிக்கத்தக்க மூலங்களை தேசிய மின்வலுக் கட்டமைப்புக்கு ஒன்றிணைப்பதற்கு வசதிகளை வழங்குவதற்கு பிரதான மின்கடத்தி வலையமைப்பை நிறுவுதல் மற்றும் புத்தளத்தைச் சூழவுள்ள மொத்த மின்னுற்பத்தியை விநியோகிப்பதற்கான மின்கடத்தி வலையமைப்பில் மேன்மிகையான தடைகளைக் குறைப்பதே உத்தேச மின்கடத்தி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் நோக்கமாகும்.
உத்தேச கருத்திட்டத்தின்கீழ் நிர்மாணத்திற்கான மதிப்பீட்டுச் செலவு 24.06 பில்லியன் ரூபாய்களாவதுடன், நடுக்கால வரவு செலவுத்திட்ட சட்டகத்தில் குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தால் விதந்துரைக்கபட்டுள்ளது. கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியை ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் மூலம் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, நுரைச்சோலை - வாரியபொல மின்கடத்தல் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்குத் தேவையான நிதியை ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் மூலம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.