கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் 3,000 எரிவாயு அடுப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது.
அதன்படி, பாகங்களாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூரில் பொருத்தப்பட்டு, விற்பனைக்குத் தயார் செய்யப்பட்ட 3,000 எரிவாயு அடுப்புகளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனையின் போது இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்புகள் தேவையான தரங்களைப் பூர்த்தி செய்கின்றனவா என்பதைத் தீர்மானிக்கச் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.