கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் வளரும் கரு!



இந்தியாவின் மகாராஷ்டிராவில் கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் கரு வளர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய அரிதான மருத்துவ நிலை கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் வைத்தியசாலையில் 35 வார [9 மாத] கர்ப்பிணியான 32 வயது பெண் ஒருவருக்கு சோனோகிராபி(scan) செய்தபோது அவரின் 'கருவில் கரு' [Foetus inside foetus] வளருவது கண்டறியப்பட்டது.

இது ஒரு மிகவும் அரிதான மருத்துவ நிலையாகப் பார்க்கப்படுகிறது, இதுபோன்ற ஒரு நிலை 5 இலட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே நிகழ்கிறது.

இதுகுறித்து அந்த வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவர் கூறுகையில்,

ஆரம்பத்தில் நான் ஆச்சரியமடைந்தேன், பின்னர், ஸ்கேனின் மறுபரிசீலனையின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டது.

குழந்தை பிறந்த பிறகே இந்த நிலை பெரும்பாலும் கண்டறியப்படுவது வழக்கம்.

ஆனால், இப்பெண்ணுக்குப் பிரசவத்துக்கு முன்பே இது கண்டறியப்பட்டது.

இந்த நிலைக்கான சரியான காரணம் முழுமையாக அறியப்படவில்லை.

இருப்பினும், இது இரட்டையர்களின் வளர்ச்சியின் போது நிகழும் ஒழுங்கின்மையின் விளைவு என நம்பப்படுகிறது.

இந்த பெண் தற்போது பாதுகாப்பான பிரசவத்திற்காக சத்திரப்பதி சம்பாஜி நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Previous Post Next Post