தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்


2024  நடைபெறுகின்ற பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு இன்றைய தினம்(30) நாடு பூராகவும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இதன்பிரகாரம் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையம், மாவட்ட தேர்தல் அலுவலகம் அடக்கலாக 14 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது. 

இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 3947 பேர் தகுதிபெற்றுள்ளனர். 

ஏனைய அனைத்து துறைகளுக்குமான தபால் மூல வாக்களிப்பானது வருகின்ற 01.11.2024 அன்று நடைபெறவுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 99 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறும். 

தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்கு இறுதி சந்தர்ப்பமாக வருகின்ற 04.11.2024 அன்று அனைத்து மாவட்ட செயலக தேர்தல் காரியாலயத்தில் வாக்களிக்க முடியும்.
Previous Post Next Post