பெரும்போக நெற் செய்கை நடவடிக்கைகளுக்காக பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர நீர் வயலுக்கு விடப்பட்டது


2024 பெரும்போக நெற் செய்கைக்காக பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர நீரை விநியோக நிகழ்வு (25) சமய அனுஷ்டான ஆசீர்வாதங்களுடன் இடம்பெற்றது.

அதற்கிணங்க இம்முறை பெரும்போகத்தில் 25,100 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்படுவதாக பராக்கிரம சமுத்திரத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் அஞ்சன அபேசிங்க தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொலன்னறுவை  மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க வின் தலைமையில் சமுத்திர வாயில் திறக்கப்பட்டு, கால்வாயில் பிரதான நுழைவாயில் ஊடாக வயல்களுக்கு நீர் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பராக்கிரம சமுத்திர நெல் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post