பாடசாலை மாணவர்கள் பயணிக்கும்; வேன் மற்றும் பஸ் கட்டணங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், இது தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் புத்தசாசனம், சமயம்; மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைத்த போதிலும் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும்; வேன் மற்றும் பஸ்களின் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை. இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.