முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பிலுள்ள உணவகங்களில் திடீர் சோதனை



முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகங்களிற்கு  திடீர் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த சுற்றிவளைப்பானது நேற்றைய தினம் (02) மேற்கொள்ளப்பட்டிருந்தது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள உணவகங்களில் புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர், சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த திடீர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்துள்ளனர்.

சுற்றிவளைப்பு நடவடிக்கை

சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சில உணவகங்களில் காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அக்கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதுடன் இரண்டு உணவகங்களை மூடப்பட்டு சில திருத்த வேலைகளை மேற்கொண்ட பின்னர் அவற்றை திறந்து நடாத்த முடியும் எனவும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உணவக சுற்றிவளைப்பு பரிசோதனை நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியரூபன் (B.Sathyaruban) தலைமையில் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post