வாக்கெண்ணும் நிலையமான யாழ் மத்திய கல்லூரியில் முன்னாயத்த களஆய்வு



எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக  வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும்  ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்  நேற்று (16)கள ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது.

இக் கள ஆய்வில்   மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு  தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post