இந்த உலகில் மிகப்பெரிய நாடுகள் இருப்பதை போன்று சிறிய நாடுகளும் உள்ளது.
இந்த சிறிய நாடுகளில் மக்கள் தொகையும் குறைவாகவே காணப்படும்.
மினியேச்சர் நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள் அளவு மற்றும் மக்கள்தொகையில் சிறியதாக இருந்தாலும், கலாச்சாரம், வரலாறு மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றை கொண்டுள்ளன.
வத்திக்கான்
இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குள் இந்த நகரம் அமைந்துள்ளது. வெறும் 0.44 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 497 மக்கள் மட்டுமே வசிக்கும் இது ஒரு தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடு.
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அனைத்து பெரிய மதத் தலைவர்களும் இங்குதான் வாழ்கின்றனர்.
மொனாக்கோ
இதன் பரப்பளவு 1.95 சதுர கிலோமீற்றர். பிரெஞ்சு ரிவியேராவில் பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் தன்னாட்சி பெற்ற நாடாக திகழ்கிறது. அளவில் சிறியதாக இருந்தாலும், ஆடம்பரமான வாழ்க்கை முறையால் உலகளவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
நவ்ரூ
மூன்றாவது இடத்தில் நவ்ரூ (Nauru) என்ற நாடு உள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு நவ்ரு. தனது இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது.
வெறும் 21 சதுர கிலோமீற்றர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த நாடு, பசுமையான பவளப்பாறைகள் மற்றும் அழகிய கடற்கரைகள் கொண்ட சொர்க்கமாக திகழ்கிறது.
துவாலு
துவாலு, என்பது பசிபிக் கடலில் ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.
இது முன்னர் எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்டது. 26 சதுர கிலோமீற்றர் பரப்பளவு மட்டுமே உள்ள துவாலு தென் பசிபிக் கடலின் மாணிக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் நாடாகவும் உள்ளது.
சான் மரினோ
சான் மரினோ, அழகிய அப்பெனின் மலையின் மீது அமைந்துள்ளது. இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்ட நாடு. ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு இதுவாகும். இது உலகின் பழமையான குடியரசு நாடாக அறியப்படுகிறது.
லீக்கின்ஸ்டைன்
சுவிட்சர்லாந்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் அமைந்துள்ள லீக்கின்ஸ்டைன், 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள சிறிய நாடாகும்.
அல்பைன் நிலப்பரப்புகள், அரண்மனைகள் மற்றும் வசீகரமான கிராமங்களுக்கு பெயர் பெற்ற இந்த நாடு மலையேற்றம், பனிச்சறுக்கு போன்ற சாகசங்களுக்காகவும், அந்நாட்டின் உணவுகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
மார்ஷல் தீவுகள்
மார்ஷல் தீவுகள், பசிபிக் பகுதியில் உள்ள பல தீவுகளை உள்ளடக்கிய ஒரு நாடு. அதன் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுக்கு பெயர் பெற்ற மார்ஷல் தீவுகள் பவளப்பாறைகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றை கொண்டுள்ளன.
சாகசத்தையும் அமைதியையும் விரும்புவோரின் தேர்வாக இந்த தீவுகள் அமைந்துள்ளன.