கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான வேலை நேரத்தை வாரத்திற்கு 24 மணிநேரமாக நிர்ணயிக்கும் புதிய விதி அறிமுகப்படுத்தபடவுள்ளது.
இந்த விதியானது இந்த ஆண்டு இறுதியில் நடைமுறைப்படுத்தபடவுள்ளது என கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் கனடா குடியுரிமை அமைப்பு (IRCC) அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) கணக்கில் பதிவிட்டுள்ளது.
அதாவது இப்போது உள்ள 20 மணி நேர வேலை வரம்பு 24 மணி நேரமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தகுதியுள்ள முழுநேர மாணவர்கள் வகுப்பு இருக்கும் போது வாரத்திற்கு 20 மணிநேரம் வேலை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதி
மேலும், இது சர்வதேச மாணவர்களுக்கு தங்கள் கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் சமநிலைப்படுத்தும் சுதந்திரத்தை வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் வேலை குறைவுகளை சமாளிக்க, அதிக நேர வேலை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், புதிய விதி தற்போது கல்வியை பாதிக்காமல் மாணவர்கள் அதிகபட்சம் 24 மணி நேரம் வேலை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மாணவர்கள் இதன் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, மேலும் கனடாவில் தங்கி பணிபுரிவதற்கான நெருக்கடியின்றி கூடுதல் உதவிகளை பெற முடியும்.
கனேடிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, அமெரிக்காவிலும் கனடாவிலும் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள், வாரத்திற்கு 28 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் மாணவர்களின் கல்வித் திறனில் கணிசமான சரிவு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.