தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கோரிக்கை விடுத்தார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியாளர்களுடனான சந்திப்பின் போதே ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தேர்தல் மும்முரமாக இடம்பெறும் காலப்பகுதியான செப்டம்பர் 15ஆம் திகதி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 12.15மணிவரை பிள்ளைகளுக்கு இடையூறு ஏற்படும் விதமாக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது பிள்ளைகள் எதிர்கொள்ளும் முதலாவது பரீட்சை என்றும், சமூகப் பொறுப்பாக இதனைக் கருத்திற்கொண்டு அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் மேலும் கோரிக்கை விடுத்தார்.