2025 அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு - நிதி இராஜாங்க அமைச்சர்



அமைச்சரவை ஊடாக இரண்டு தடவைகள் அனுமதி வழங்கப்பட்டு, 2025ஆம் ஆண்டு அரசாங்க சேவை சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என  நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிடிய குறிப்பிட்டார்.

அத்துடன் 25000 ரூபா வாழ்க்கைச் செலவுப் படி மற்றும் 24 வீதம் குறைந்த அடிப்படைச் சம்பளம் அதிகரிப்பதற்கு சகல சட்ட ரீதியான அனுமதிகளும் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பல வருடங்களாக இடம்பெற்ற சம்பள முரண்பாடு தொடர்பாக கண்டடிறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை 2024 மே 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்கு முன்வைத்த 2024/20 யோசனைக்கு இணங்க, அக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு 2024 ஆகஸ்ட் 12ஆம் திகதி மீண்டும் அமைச்சரவை அனுமதி கிடைத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அச்சிபாரிசுகளுக்கு இணங்க 25000ரூபா வரை வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை அதிகரித்தல், குறைந்தது 24% வீதமாகுமாறு அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தல், மருத்துவக் காப்புறுதி முறையை அறிமுகப்படுத்தல், வினைத்திறனாக அரச சேவையில் செயற்படும் அதிகாரிகளுக்கான வாழ்க்கைச் செலவுப் படியின் அரைப்பகுதிக்குச்  சமமான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ஓய்வூதியக்காரர்களுக்கும் வழங்குதல் போன்ற விடயங்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.

2024 செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி அக்குழுவின் முழுமையான அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதுடன் 8 விடயங்களுக்கான இணக்கப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்காகவும் வரவு செலவுத் திட்ட பணிப்பாளர் நாயகம் கலந்துகொண்டதுடன் நிதி ஒதுக்கீடு தொடர்பாக எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அதன்படி இச்சம்பள அதிகரிப்பு இடம்பெறுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிடிய மேலும் விபரித்தார்.
Previous Post Next Post