மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் 2024.09.20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும்



2024.09.21 திகதி அன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வசதிகளை வழங்குவதற்காக கொழும்பு 05, எல்விடிகல மாவத்தை, நாரஹேன்பிடயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் 2024.09.20 (வெள்ளிக்கிழமை ) மூடப்பட்டிருக்கும் என்று மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் பிரதான அலுவலகம் (ஆ) கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதியின் இலக்கம் 6 மற்றும் 7 பிரிவுகளுக்கான வாக்கெடுப்பு மத்திய நிலையமாக வருத்தமான அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1981 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான சட்டத்தின் 4 ஆவது சரத்தின் (1) பந்தியின் பிரகாரம் குறித்த வாக்கெடுப்பு மத்திய நிலையம் எவ்வித இடையூறுகளும் இன்றி செயல்படுவதற்கான வசதிகளை வழங்குவதற்காக கொழும்பு 05, எல்விடிகல மாவத்தை, நாரஹேன்பிடயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் 2024.09.20 (வெள்ளிக்கிழமை ) அன்று வழமையான அலுவலகப் பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் என பொதுமக்களுக்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post